மணிமியூல் மோசடி,தமிழகம் முழுவதும் 2 நாள் சிறப்பு சோதனை – 800-க்கும் மேற்பட்டோர் கைது
தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) மணிமியூல் (Money Mule) தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கையில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் கேமி
Money m


தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

மணிமியூல் (Money Mule) தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கையில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் கேமிங், ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்ற மோசடிகளில் மணிமியூல் வங்கி கணக்குகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சைபர் கிரைம் கும்பல்களின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்து, தங்களது வங்கி கணக்குகளை வழங்கி கமிஷன் பெற்றதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மணிமியூல் கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மட்டும் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிமியூல் கணக்குகளை பயன்படுத்தி நடைபெறும் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P