முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு
தேனி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக 142 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 152 அடி என்றாலும
Mullaperiyar Dam water level rises to 142 feet.


தேனி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக 142 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் மொத்த உயரம் 152 அடி என்றாலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1526 கன அடியாக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்து வினாடிக்கு 1318 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்தாலும் நீர்மட்டம் தொடர்ந்து 142 அடியாகவே நீடிப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் பாசன தேவைக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b