உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் மயங்கி சரிந்த காவலர்கள் - புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து கார் மூலம் வந்தார். புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய அவர், இன்று காலை கோரிமேடு காவலர் மைதானம் வந்தா
Police personnel collapse at event


புதுச்சேரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து கார் மூலம் வந்தார்.

புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய அவர், இன்று காலை கோரிமேடு காவலர் மைதானம் வந்தார்.

அங்கு நடைபெற்ற விழாவில் காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி விருதை வழங்கி சிறப்பித்தார்.

விழாவை முன்னிட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதற்காக அவர்கள் காலை 6 மணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து விழா முடியும் வரை காலை 10 மணி வரை வெயிலில் நிக்க வைக்கப்பட்டனர்.

விழா மேடையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிக் கொண்டு இருந்த போது வெயிலில் நிக்க வைக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் வெளியின் கொடுமையால் மயங்கி விழுந்தனர்.

வெயிலின் தாக்கத்தால் மயங்கி சரிந்த காவலர்களை சக காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.

இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.

Hindusthan Samachar / vidya.b