Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதை புதுச்சேரி காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார்.
கோரிமேடு காவலர்கள் மைதானத்தில் நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில்,
இந்த விருது நமது காவல்துறைக்கு கிடைத்ததற்கு பெருமை மற்றும் வெற்றியாகும். புதுச்சேரி மாநிலம் சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
ஆன்மீக பூமியான இங்கு சுற்றுலா பயணிகளை வருகை அதிகரித்து வருகிறது. அதற்குப் பெரிய பங்கு காவல்துறையை சார்ந்ததாகும். ஏனென்றால் புதுச்சேரிக்கு வந்தால் நாம் மகிழ்ச்சியோடு இந்த நாட்களை கழித்து செல்லலாம் என எண்ணி சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
அமைதியான சூழ்நிலை காரணமாக தான் அயல்நாட்டு சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வருகை புரிகின்றனர். இந்த சூழலை ஏற்படுத்தி கொடுத்த காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கான விருதுதான் இந்த போலீஸ் கௌரவ விருது. இந்த விருதை நாம் அணியும் போது முன்னாள் காவலர்களை நாம் நினைவு கூற வேண்டும்.
இந்த அரசு பொறுப்பேற்று பிறகு காவல்துறையில் இந்த அத்தனை குறைகளையும் கலைந்து சிறப்போடு பணியாற்ற அனைத்து சூழ்நிலையை மற்றும் மன அழுத்தம் இல்லாத நிலையை நமது அரசு செய்து கொடுத்துள்ளது.
காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக நமது ஆட்சியில் காலி பணியிடங்களை நிரப்பி உள்ளது. அதேபோல் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நமது காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
புதுச்சேரி காவல்துறை குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாது குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதிலும் முதல் இடத்தைப் பிடித்து வருவது என்பதில் பெருமை கொள்கிறேன். அதனால்தான் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான உதவி அனைத்தும் இந்த அரசு செய்து தரும். நமக்கு தேவையான அனைத்து நிதியை தரும் மத்திய அரசுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN