‘ஹர் கர் திரங்கா’ இந்தியாவின் கவுரவத்திற்கு அடையாளம் - பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால்
ஜெய்பூர், 09 ஆகஸ்ட் (ஹி.ச.) ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம் இந்தியாவிற்கு மிகுந்த பெருமைக்கும் கவுரவத்திற்கும் உரிய விஷயம் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவுகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் பாஜக தேசிய பொதுச்செயலா
Radha Mohan Das Agarwal


ஜெய்பூர், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம் இந்தியாவிற்கு மிகுந்த பெருமைக்கும் கவுரவத்திற்கும் உரிய விஷயம் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவுகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் பாஜக தேசிய பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராதா மோகன் தாஸ் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

‘ஹர் கர் திரங்கா’ நம் நாட்டிற்கு மிகுந்த பெருமைக்கும் கவுரவத்திற்கும் உரிய விஷயம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர், ஆனால் புதிய தலைமுறையினர் சுதந்திரப் போராட்டத்துடனும் அதற்காக போராடியவர்களின் தியாகங்களுடனும் தங்களது தொடர்பை இழந்து வருகின்றனர். அவர்களின் நினைவுகளும் மங்கி வருகின்றன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பங்களிப்பிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். தியாகம் செய்தவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், இளைய தலைமுறையினருக்கு இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்பை ஏற்படுத்தி ஊக்கமளிக்கவும் திரங்கா யாத்திரை ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம் என்பது தேசத்தின் மீதான பெருமை மற்றும் மரியாதையின் வெளிப்பாடாக குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை ஏற்ற ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சியாகும்.

ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே தேசியக் கொடி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்துடனான தொடர்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கவுரவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த பிரச்சாரம் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

குடிமக்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசம் மற்றும் அதன் வரலாற்றின் மீதான மரியாதையை மீண்டும் உறுதிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b