Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5,000 கன அடியாக சரிந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் பிரதான அருவி, சினிஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
நீர்வரத்து குறைவால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து நிலவரத்தை நீர்வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b