Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
மராட்டியத்தின் நாசிக் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.33 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 8) சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் நாசிக்கின் பன்வாட் (Bhanwad) பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தரைமட்டத்திலிருந்து 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 5:33 மணியளவில் அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக மற்றொரு நில அதிர்வு (Aftershock) ஏற்பட்டது
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.401 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.714 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நாசிக் நகரம், சுர்கானா, கல்வான், திண்டோரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
சுர்கானா மற்றும் திண்டோரி தாலுகாக்களில் உள்ள சில கிராமங்களில் வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், அப்பகுதியில் உள்ள அணைகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து அசாமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அசாமின் மோரிகன் பகுதியில் இன்று காலை 8.17 மணியளவில் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கௌஹாத்திக்கு கிழக்கே உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் லேசான நடுக்கம் மட்டுமே ஏற்பட்டது. இதனால் எந்தவித சேதமோ அல்லது உயிர் பாதிப்போ ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / vidya.b