Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1942 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒத்துழையாமை போராட்டமாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதி மற்றும் மிகத் தீவிரமான கட்டமாக அமைந்த இந்த இயக்கம், ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூர்ந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அந்த இயக்கமானது இந்தியர்களின் தலைமுறைகளுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும் என கூறியுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்ற அந்தத் துணிச்சலான ஆளுமைகள் அனைவரையும் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறோம்.
மகாத்மா காந்திஜியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய வலிமையையும் உறுதியையும் அளித்தது. காலனித்துவ ஆட்சியின் விலங்குகளை உடைத்தெறிந்து சுதந்திரம் அடைவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியை இது பிரதிபலித்தது.
அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் தேசப்பற்று உணர்வு ஆகியவை இந்தியர்களின் தலைமுறைகளுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b