மக்களுக்கு சேவை செய்வதில் புதுச்சேரி காவல்துறை முதலிடம் - அமைச்சர் அமித் ஷா புகழாரம்!
புதுச்சேரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதை புதுச்சேரி காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார். குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது என்பது இந்தியா
Amit Shah


புதுச்சேரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதை புதுச்சேரி காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கினார்.

குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது என்பது இந்தியாவின் முப்படைகள், துணை ராணுவப் படைகள் அல்லது மாநிலக் காவல்துறை பிரிவுகளுக்கு அவற்றின் சிறப்பான நீண்டகாலச் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும்.

அதனைத் தொடர்ந்து அவ்விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

நமது புதுச்சேரி தமிழகத்தில் மிகப் பெரிய கலாச்சாரத்தில் பாரம்பரத்தில் அடையாளமாக விளங்குகிறது.

மகரிஷி அன்னை, அரவிந்தர் நீண்ட காலம் வாழ்ந்ததால். இங்கு இயல்பாகவே ஆன்மீகம் ஏற்படுத்துள்ளது இது ஒட்டுமொத்த பாரதத்திற்கே நீட்டிப்பு செய்துள்ளது.

மகாகபி சுப்பிரமணி பாரதியார் நீண்ட காலமாக இங்கு தங்கி இருந்தார் அவர் தமிழகம் ஒரு ஒருங்கிணைந்த பாரதம் என்ற கனவை முன்னிருத்தி தனது கவிதைகளை தந்திருந்தார்.

குடியரசுத் தலைவர் கொடி புதுச்சேரி காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரு அருமையான தருணம். நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது இது புதுச்சேரிக்கு மிகப்பெரிய கௌரவம் ஆகும்.

மத்திய அரசு சார்பாக புதுச்சேரி காவல்த்துறை, அரசுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எனது பாராட்டுகள்.

தென்பாரதத்தில் நான்கு மாநிலங்களில் சிதறி கிடக்கும் புதுச்சேரிக்கு இது கடினமான உழைப்பு, அற்பனிப்பு.

குடியரசு தலைவரின் கொடி பெருமைமிகு கொடி என்பது இது மிக சாதனமான கொடி அல்ல இது ஒரு பெருமிதம் அளிக்கக் கூடிய விஷயம் ஐந்து ஆயிரம் பேர் மட்டும் இருக்கக்கூடிய புதுச்சேரி காவல்துறையில் இருந்தால் கூட இந்த மண்ணில் பாரம்பரியம், மரபு ஆகியவற்றை தாண்டி சட்ட ஒழுங்கையும் நீங்கள் பராமரித்து இருக்கிறீர்கள், அர்ப்பணிப்பு காரணமாக உங்களுக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் தகவல்களை கேட்டபோது, புதுச்சேரி காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தில் பெற்றது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சாகச நிறை மனதோடு பணி புரிந்திருக்கிறீர்கள்.

புதுச்சேரி காவல்துறை சேவை மனப்பான்மை அந்த அர்ப்பணிப்பு, மற்றும் உங்களுடைய அந்த சாகசம் இது புதுச்சேரி காவல்துறையில் பொண் எழுத்துகளில் எழுதப்படக்கூடியது.

கடந்த 12 ஆண்டுகளாகவே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசம் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். குறிப்பாக புதுச்சேரிக்கு மோடி அரசாங்கம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

1963 ஆம் ஆண்டிற்கு பிறகு டிஜிபி என்ற பதவி அமைக்கப்பட்ட பிறகு, அதற்கு பின்னர் புதுச்சேரி காவல் துறை சிறப்பாக செயல் அற்றி வருகிறது.

1950 தொடங்கி 2014 வெறும் 35 ஆயிரம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2014 தொடங்கி 2026 பாரத அரசாங்கம் ரூ. 13762 கோடி வழங்கியுள்ளது.

இந்த 12 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிக தொகை புதுச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் 39 ஆயிரம் கோடி நலத்திடங்கள் புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் சார்பில் புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN