வாடிப்பட்டியில் வேனில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். வாடிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில்
Vadipatti Police Station


மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.

வாடிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது, பெங்களூரில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக 700 கிலோ புகையிலை பொருட்கள் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேனில் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பிக்கப் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன, இந்த கடத்தலுக்கு பின்னால் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வாடிப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN