100.17 கன அடியை தொட்ட சோலையார் அணை நீர்மட்டம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோவை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை மிகவும் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய அணையாகும். இது தென்னிந்தியாவின் இரண்டாவது அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு 165 கன
Sholayar Dam


கோவை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை மிகவும் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய அணையாகும். இது தென்னிந்தியாவின் இரண்டாவது அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது.

கடந்த 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு 165 கன அடியாகும்.

தற்போது இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் மழையின் அளவு குறைவாக இருந்ததால் சோலையார் அணை வறண்டு காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால் தற்போது தட்டு தடுமாறி 100 கன அடியை எட்டி உள்ளதால் அப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் இன்னும் 20 நாட்களே பருவமழை காலங்களாக உள்ளது. இதற்கு பின்பும் மழை இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் இந்த அணை நிரம்பியை வழியும் நிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு, திருமூர்த்திமலை உள்ளிட்ட அணைகளும் நிரம்பும் இந்த ஆண்டு மழை குறைவாக இருப்பதால் சோலையார் அணையை தத்தளித்துக் கொண்டுள்ளது.

வரும் காலங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமல்ல இந்த தண்ணீரை நம்பி உள்ள ஆனைமலை பாசன விவசாயிகள் இந்த தண்ணீரை நம்பியே உள்ளனர்.

மேலும் தற்போது தண்ணீர் நிரம்பி இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு களித்து செல்கின்றனர். கடந்த ஆண்டு மூன்று முறை மதகுகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN