Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
மக்களவை மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
மக்களவையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடு ஏற்கனவே அரசியலமைப்பின் 106-வது திருத்தச் சட்டம், 2023 மூலம் செய்யப்பட்டுவிட்டது. இதை ராகுல் காந்தியும் சுட்டிக்காட்டியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
பெண்கள் இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் மத்திய பாஜக அரசு தேவையின்றி இணைத்திருப்பதாகவும், இது திட்டமிட்ட செயல்பாடு என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
2023-ம் ஆண்டிலேயே இந்த இணைப்பை எதிர்த்து காங்கிரஸ் சுட்டிக்காட்டியதாகவும், ஆனால் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கும் நடைமுறையை நீக்கினால், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியும். எனவே, கிரண் ரிஜிஜுவின் கருத்து முற்றிலும் தவறானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P