வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பக்தர்கள் பலி - 15 பேர் படுகாயம்
பல்வால், 01 செப்டம்பர் (ஹி.ச.) ஹரியானா மாநிலம் பல்வால் அருகே குண்ட்லி-மானேசர்-பல்வால் (KMP) விரைவுச்சாலையில் இன்று அதிகாலை பக்தர்கள் சென்ற பிக்அப் வேன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்ததாக காவல்த
வேன் மீது  லாரி மோதிய விபத்தில்  5 பக்தர்கள் பலி - 15 பேர் படுகாயம்


பல்வால், 01 செப்டம்பர் (ஹி.ச.)

ஹரியானா மாநிலம் பல்வால் அருகே குண்ட்லி-மானேசர்-பல்வால் (KMP) விரைவுச்சாலையில் இன்று அதிகாலை பக்தர்கள் சென்ற பிக்அப் வேன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் உள்ள காட்டு ஷியாம் மற்றும் பாலாஜி கோயில்கள் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றுவிட்டு உத்தரப்பிரதேசத்தின் விருந்தாவனத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்வால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். காயமடைந்த 15 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த கிசான்பூர் முரையா, மகோயா, சந்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை யாத்திரையை தொடங்கியுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாகவும், பிக்அப் வேன் ஓட்டுநரும் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான ஓட்டுநர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b