செப்டம்பர் 6-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச) சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைம
AIADMK District Secretaries' meeting on September 6


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச)

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர்.

சி.வி.சண்முகம் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.

கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செப்.6-ம் தேதி பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b