Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, தமிழக அரசின் கடன் அதிகரித்து வருவதாகவும், வருவாயைப் பெருக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் விமர்சித்தார்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை அறிவிப்பதாக கூறும் அரசு, பழைய பேருந்துகளை இயக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடத்தி பணம் பறிமுதல் செய்து வருவதே இதற்கு சாட்சி என்றும் தெரிவித்தார்.
விஜய் அடுத்த பிரதமராகலாம் என்ற பிரசாரம் குறித்த கேள்விக்கு,
அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆகலாம், அது அவரது விருப்பம் என பதிலளித்தார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அதிகரிக்கும் கடன் உள்ளிட்டவற்றால் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P