திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
திருமலை , 01 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் 77 ஆயிரத்து 42 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், 36 ஆயிரத்து 698 பக்தர்கள் தலைமுடி காணி
A


திருமலை , 01 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 77 ஆயிரத்து 42 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், 36 ஆயிரத்து 698 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 50 லட்சம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 4 லட்சத்து 14 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இதற்கிடையே, திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் நேற்று 3 ஆயிரத்து 151 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA