சட்டசபையில் கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளையாட்டுத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய 23 கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சளைக்காமல் பதிலளித்தார். விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கும் தொடர்ந்து விளக
ஜெகதீஸ்வரி


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளையாட்டுத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய 23 கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சளைக்காமல் பதிலளித்தார்.

விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கும் தொடர்ந்து விளக்கம் அளித்த அவர், உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் நேரடியான பதில் அளிக்காமல், தன்னிடம் இருந்த குறிப்பைப் பார்த்து பதிலை வாசிக்கத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து துணைக் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும், அதே பதிலையே அமைச்சர் மீண்டும் கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் காந்திராஜ், வினோத் மற்றும் முன்வரிசையில் இருந்த செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் அவருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதையடுத்து, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒரே பதிலை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam