தெலங்கானாவில் ஜனநாயகத்திற்கு எதிரான சூழல் நிலவுகிறது - பா.ஜ.க மாநில தலைவர் ராமச்சந்தர் ராவ் குற்றச்சாட்டு
ஹைதராபாத், 01 செப்டம்பர் (ஹி.ச.) பாஜக மாவட்ட தலைவர் நாகம் வர்ஷித் ரெட்டியை சந்திக்க நல்கொண்டா செல்வதைத் தடுக்கும் வகையில், தெலங்கானா பாஜக மாநில தலைவர் என். ராமச்சந்தர் ராவ் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீட்டுக் காவலில் வைக
BJP State President Ramchander Rao alleges.


ஹைதராபாத், 01 செப்டம்பர் (ஹி.ச.)

பாஜக மாவட்ட தலைவர் நாகம் வர்ஷித் ரெட்டியை சந்திக்க நல்கொண்டா செல்வதைத் தடுக்கும் வகையில், தெலங்கானா பாஜக மாநில தலைவர் என். ராமச்சந்தர் ராவ் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வர்ஷித் ரெட்டியின் வீடு சூறையாடப்பட்டதாகவும், அந்த சம்பவத்தில் அவரது தாயார் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா பாஜக மாநில தலைவர் என். ராமச்சந்தர் ராவ் கூறுகையில்,

எது நடந்தாலும் நல்கொண்டா செல்வது என்று முடிவு செய்தேன். இன்று காலை முதல் போலீசார் என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

இது கடந்த மூன்று நாட்களில் எனக்கு இரண்டாவது முறையாக விதிக்கப்பட்ட வீட்டுக் காவல். தெலங்கானாவில் இப்படித்தான் நிலைமை உள்ளது. நெருக்கடி நிலை காலத்தை விட மோசமான ஜனநாயக விரோத சூழலை நாம் கடந்து செல்கிறோம்.

தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு விரக்தியில் உள்ளது, ஏனென்றால் இளைஞர்களும் மாணவர்களும் பாஜக அலுவலகத்திற்கு வந்து கட்டண திருப்பிச் செலுத்துதலுக்காக அரசுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

நேற்று, அவர்கள் பாஜகவின் மாநில அலுவலகத்தை தாக்கி சுவர்கள் மற்றும் வாயிலில் கருப்பு வண்ணம் பூசி அவதூறு செய்ய முயன்றனர். நல்கொண்டா மாவட்ட தலைவரின் வீடு சூறையாடப்பட்டது. அந்த களேபரத்தில் அவரது தாயார் காயமடைந்தார்

என்று ராவ் தெரிவித்தார்.

இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த பாஜக மாநில தலைவர், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் பாஜக பதிலடி கொடுக்கும் என்றும் நிலைமை மோசமடையும் என்றும் எச்சரித்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்க்குமாறு காவல்துறை மற்றும் மாநில அரசுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்ததுடன், இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

Hindusthan Samachar / vidya.b