ஜனநாயகத்தை பா.ஜ.க அரசு சீரழித்துவிட்டது-மாணிக்கம் தாகூர்
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியா ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி வெளிநாட்டு மேடைகளில் பேசிவரும் நிலையில், வி-டெம் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு இந்திய ஜனநாயகத்தின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
மாணிக்கம்


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி வெளிநாட்டு மேடைகளில் பேசிவரும் நிலையில், வி-டெம் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு இந்திய ஜனநாயகத்தின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

179 நாடுகள் கொண்ட ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 106-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி, நியாயமான தேர்தல் நடைமுறை, சிறுபான்மையினர் உள்ளிட்ட வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதித்துறை, ஊடகங்கள், கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை பாஜக அரசு சீர்குலைத்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதாகவும் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டி, ராகுல் காந்தி தலைமையில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P