அறிவு இருக்கும் எந்த கட்சியும் இந்த வேலையை செய்யாது - முதல்வருக்கு அறப்போர் இயக்கம் கண்டனம்
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
Arappor


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை விமர்சிக்கும் விதமாக அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில்,

உயிரை பறிக்கும் கொடிக்கம்பம் மற்றும் பேனர்கள் கண் முன்னே தெரியவில்லையா முதல்வரே? அறிவு இருக்கும் எந்த கட்சியும் இந்த வேலையை செய்யாது ! மாற்றம் என்பது மக்களை ஏமாற்றவா ?

இதை வெட்கமின்றி வேடிக்கை பார்க்கும் சேலம் காவல்துறை தலைமை அதிகாரி , ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் எங்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த பேனர்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கும் நீங்கள் வெட்கி தலை குனிய

வேண்டும் !

இந்த அறிவற்ற கட்சிகள் வைக்கும் பேனர், கொடிக்கம்பத்தில் சிக்கி

சுபஸ்ரீ , ரகு போன்று இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் உங்களுக்கு ? என்று பதிவிட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN