Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மாதம் சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - 2026’-ஐ நடத்தியது.
முதல்வர் விஜய் தலைமையிலான இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது தங்கள் இலக்கு என்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்ததிருந்தார்.
அந்த வகையில் வரும் 10-ம் தேதி மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயணத்தில் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை அவர் சந்தித்து, முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.
அவருடன் தொழில் துறை அதிகாரிகளும் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. செப்.16-ம் தேதி வரையில் முதல்வர் விஜய்யின் பிரிட்டன் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்மிக்க மனிதவளத்தை எடுத்துக்கூறி, மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களை மாநிலத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் முக்கிய இலக்காகும்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் விஜய்யின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b