அடிமைத்தனத்தை ஏற்க மறுத்த மாவீரன் பூலித்தேவன் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் - முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழஞ்சலி
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமிழக மண்ணில் துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழஞ்சலி
Cm


Bb


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமிழக மண்ணில் துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், நெற்கட்டும்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடியவர் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மண் மீதான அவரது பற்றும், சுதந்திர வேட்கையும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் தியாகமும் வீரமும் வருங்கால தலைமுறையினருக்கு என்றும் உந்துசக்தியாக விளங்கும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது புகழஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில் அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், “தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்” என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ