Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இன்றுடன் பதவியேற்று 1,000 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் செயல்பாடுகளை மாநில பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ் கூறுகையில்,
இன்று செப்டம்பர் 1, 2026 அன்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதற்காக அவர்கள் பெரிய அளவில் விளம்பரங்கள், மக்கள் சந்திப்பு, ஊடக நிகழ்ச்சிகள் என ஆயிரம் நாட்கள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தெலங்கானா பாஜக சார்பில் ரேவந்த் ரெட்டி அரசிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? 2023 சட்டமன்றத் தேர்தலின் போது நீங்கள் அளித்த ஆறு உத்தரவாதங்கள், 470 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளீர்களா?.
இன்று மக்களுக்கு கொண்டாட்டங்கள் வேண்டாம், பதில்கள் தான் வேண்டும். அவர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பவில்லை.
தெலங்கானா பாஜகவைப் பொறுத்தவரை, இந்த 1,000 நாட்கள் என்பது 1,000 பொய்கள், தினந்தோறும் நடந்த ஊழலின் 1,000 நாட்கள், தெலங்கானா மக்களுக்கு துரோகம் மற்றும் ஏமாற்றம் இழைத்த 1,000 நாட்கள்
என்று அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் அரசின் இந்த மைல்கல்லை முன்னிட்டு , அதன் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) மாநிலம் தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையும், பல்வேறு சமூகப் பிரிவினர் எதிர்கொள்ளும் சிரமங்களையும் வலியுறுத்தி செப்டம்பர் 2 முதல் தெலங்கானா முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b