Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' - திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் - சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்... கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன் பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது.
தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான ஃபேண்டஸி அம்சம் - அந்த டீசரில் இடம்பெற்றிருந்தது.
இப்படத்தின் ஃபேண்டஸியான கதைக்களமும், அதன் தனித்துவமான பின்னணியும், படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் இசையமைப்பாளர் கால பைரவாவின் இசையில் உருவான கேக்கு வாக்கு
(Cakeu Walku) என்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பாடலை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர்.
'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் தனது மாயாஜால ஃபேண்டஸி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக உள்ளது
Hindusthan Samachar / Durai.J