ஒகேனக்கல் காவிரியில் 11,000 கனஅடி நீர்வரத்து – பரிசல் இயக்கத் தடை 17வது நாளாக நீடிப்பு
தர்மபுரி, 01 செப்டம்பர் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில், தற்போது வினாடிக்கு 11,000 கனஅடியாக நீடித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் அணைகளில் இருந்து திறக்கப்
ஒகேனக்கல்


தர்மபுரி, 01 செப்டம்பர் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில், தற்போது வினாடிக்கு 11,000 கனஅடியாக நீடித்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை தொடர்ந்து 17வது நாளாக நீடித்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam