பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இருமடங்காக உயர்வு - நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது
ஈரோடு, 01 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக,
Inflow to Bhavanisagar Dam doubles


ஈரோடு, 01 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 456 கன அடியில் இருந்து 933 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 49.84 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 105 அடி என்ற நிலையில், தற்போதைய நீர் இருப்பு 4.3 டி.எம்.சி.யாக பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நீர்மட்டம் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b