Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்று விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் திறந்தவெளி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர், வீரர்களுக்கு வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காகவும், அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் விளையாட்டுப் போட்டிகளை முறையாக திட்டமிட்டு நடத்துவதற்கு தனி செயல் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இதன்படி அனைத்து போட்டிகளும் காலை மற்றும் மாலை நேரங்களில், குளிர்ச்சியான சூழலில் நடத்தப்படும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் விளையாட்டு அகாடமிகள் இந்த உத்தரவை உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b