Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதா நினைவு நாள் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்துவதற்கு சட்டத்திருத்தம் வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு.
கடந்த ஆகத்து 17 அன்று எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்களில், தீர்மானம் 34 - 'ஒத்திசைவுப் பட்டியலின் 25-ஆவது இனத்தையும் மாநிலப் பட்டியலின் 11-ஆவது இனத்தையும் திருத்தி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' என்று வலியுறுத்துகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் மாணவர்கள் - இளைஞர்கள் கொதித்தெழுந்துள்ளனர். தனது இறுதி மூச்சு வரை அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக போராடி மடிந்த நமது தங்கை அனிதா பற்ற வைத்த நெருப்பு தான் இன்று ஒன்றிய பாஜக அரசை நடுங்க வைத்துள்ளது.
நீட் தேர்வு ரத்து தான் நமது இலக்கு!
தங்கை அனிதாவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN