பரமத்திவேலூரில் 85 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது
நாமக்கல், 01 செப்டம்பர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்–மோகனூர் சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தன
Arrest


நாமக்கல், 01 செப்டம்பர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்–மோகனூர் சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமத்திவேலூர்–மோகனூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சுமார் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 85 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், நன்செய் இடையாறைச் சேர்ந்த மகேந்திரன் (41) மற்றும் மோகனூர் கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (28) ஆகியோர் குட்காவை கடத்தி வந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூருவில் இருந்து கொரியர் மூலம் குட்கா பொருட்களை பெற்று, பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இவர்களுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN