Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி இன்று செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் ரூ.10.50 உயர்ந்து ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் இதன் விலை ரூ.2,906 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
வணிக சிலிண்டரின் விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், உணவுப் பொருட்களின் விலையை அடிக்கடி உயர்த்த முடியாத சூழலில் இந்த விலை உயர்வு தங்களின் லாபத்தைப் பாதிப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b