பூலித்தேவர் 311-வது பிறந்தநாள் விழா- தென்காசி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமல்
தென்காசி, 01 செப்டம்பர் (ஹி.ச.) சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் 311-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவர் வாழ்ந்த சொந்த ஊரான தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் பகுதியில் தற்போது விழாவானது களைகட்டியுள்ளது. குறிப்பாக, பல்வேறு முக்கிய பிரமு
Pulidevan


தென்காசி, 01 செப்டம்பர் (ஹி.ச.)

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் 311-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவர் வாழ்ந்த சொந்த ஊரான தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் பகுதியில் தற்போது விழாவானது களைகட்டியுள்ளது.

குறிப்பாக, பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், முதலில் பூலித்தேவரின் வாரிசுகள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் எனவும், தொடர்ந்து அரசு சார்பில் மின் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜுவ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.

குறிப்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவார்கள் என்பதால், தென்காசி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் 1,624 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களுடன் நான்கு நபர்கள் மட்டுமே பூலித்தேவருக்கு மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN