Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
தமிழர்கள் ஆள்கிறார்கள் என பெருமிதம் கொள்ள முடியாது. தமிழன் ஆள்வதல்ல கனவு, தமிழன் தமிழனாக ஆள வேண்டும், தமிழுக்கும் தமிழருக்குமாக ஆள வேண்டும் தமிழனாக பிறந்தவன் எல்லாம் தமிழன் அல்ல
இங்கு காட்டிகொடுத்தவர்கள் எல்லாம், துரோகம் செய்தவன் எல்லாம் நம் ரத்த சொந்தமாக இருக்கிறான்
தமிழனுக்கு வீரமும் மானமும் உடன் பிறந்தது போல துரோகமும் உடன் பிறந்திருக்கிறது
நம் பாட்டனுக்கும் பாட்டிக்கும் துரோகம், உடன் பிறந்தவன் ரத்த துரோகம்
தமிழன் ஆள வேண்டும் என சொல்லவில்லை, புரட்சித்தமிழாய்ந்த தமிழ் மகன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
தமிழை பார்த்து படிக்கும் போதே 10 ,20 தவறுகள் வருகிறது. ஒன்னு ரெண்டே ஒழுங்கா வரல;
நல்லவேலை தாத்தன் செத்துபோனான் இல்லனா சட்டசபையில் வந்து தீக்குளித்திருப்பார் காலக்கொடுமை
இந்த இனத்திற்கு எவ்வளவோ பிரச்சனைகள் வந்துள்ளது போராடியிருக்கோம்
சர்கார் பட போஸ்டர் கிழித்தது தான் சர்வதேச பிரச்சனை என்கிறார்கள், சட்டசபையில் லாடு லபக்குமாதிரி பேசுகிறார்கள்
மீனவனை சுட்டால், காவிரி்நீர் மீட்கப்பட வில்லை , ஸ்டெர்லைட் துப்ப்பாக்கி சூடு நடந்தது Is not Our Problem Only Sarkar Poster Our Problem என்பது போல உள்ளனர்
சட்டமன்றம் தியேட்டர் போல உள்ளது; சட்டமன்றத்தில் All Is well சொல்லுனு சொல்றாங்க.
உங்களை தற்குறி என கூறுவதே பெருமைக்குரிய வார்த்தை ; விளங்கா பயலே தற்குறி பயலே என பேசுகிறோம்
காமராசர் பல்கலைக கழக கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என பேசுகிறார்கள் இது கல்லாணையோ வெள்ளாணையோ.
முதலமைச்சரை பார்க்க LED வேண்டும் என்கிறார்கள் அதையும் ரசிக்கிறார்கள்.
சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போலவே உள்ளது அருமையான எண்டர்டெயிண்மெணலடாக இருக்கிறது.
மேட்டூர் அணையே கட்ட அந்த காலகட்டத்தில் 10 கோடி தான் செலவாகிருக்கும், ஆனால் அதனை திறக்க செல்ல 6 கோடி செலவாகிறது.
ஒரு பிழை நடந்துள்ளது. இவங்க நம்ம கூட பிறந்தது, அவங்க நம்ம கூட பிறந்தது; வடக்கு தொகுதி எம்எல்ஏவின் கனவை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN