Enter your Email Address to subscribe to our newsletters

நிஜாமாபாத் , 01 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகள் ரகசியமாக கைகோர்த்து செயல்படுவதாகவும், ஊழல் காரணமாகவே இரு கட்சிகளும் மிலாகத் ஆகியுள்ளதாகவும் கவிதா குற்றம்சாட்டினார்.
நிஜாமாபாத் மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ‘பாஞ்சஜன்ய சங்கல்ப சபை’ கூட்டத்தில் கவிதா கலந்து கொண்டு பேசினார் அப்போது, அவர் கூறுகையில் :
பொன் தெலங்கானா உருவாக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிஆர்எஸ் கட்சி, 10 ஆண்டுகளில் மாநிலத்தை அள்ளி அள்ளி கொள்ளையடித்தது.
அந்த ஆட்சியில் 4 வீடுகள் மட்டுமே பொன்னானது என்று விமர்சித்தார்.
ரூ.1 லட்சம் கோடி செலவில் கட்டப்பட்ட காலேஸ்வரம் திட்டத்தின் மூலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்குக்கூட தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் கடந்தும் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்றும் கவிதா விமர்சித்தார்.
தொடர்ந்து தனது குடும்ப விவகாரம் குறித்து பேசிய கவிதா, தன்னை தனது தந்தையிடம் இருந்து பிரித்ததில் பிரசாந்த் ரெட்டிக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றம்சாட்டினார். “ஹரீஷ் ராவ், சந்தோஷ் ராவை ஒருவேளை மன்னித்தாலும், பிரசாந்த் ரெட்டியை மட்டும் என் வாழ்நாளில் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவர் செய்த செயல்களுக்கான விளைவுகளை அவர் சந்திப்பார் என்று ஆவேசமாக கூறினார்.
நான் எந்த தவறும் செய்யாத போதிலும், 4 ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணைகளால் துன்புறுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டேன்.
நான் நிரபராதி என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
ஒரு பெண் கஷ்டத்தில் இருக்கும்போது, பிறந்த வீட்டினரே அவருக்கு எதிராக சதி செய்து வீட்டை விட்டு வெளியேற்றியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய கவிதா, இந்தப் பேச்சின்போது உணர்ச்சிவசப்பட்டார்.
மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அரசியலில் தொடர்ந்து போராடுவதாகவும், பதவி மற்றும் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசின் தோல்விகளை எதிர்த்து போராட வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் அமைதியாக இருப்பதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையிலான ரகசிய உடன்பாடே இதற்கு காரணம் என்றும் கவிதா குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA