பெண்கள் ஆசிய கோப்பை- இந்தோனேசியாவை சுருட்டிய வங்காளதேசம் 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
துபாய் , 01 செப்டம்பர் (ஹி.ச.) பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் ‘பி’ பிர
A


துபாய் , 01 செப்டம்பர் (ஹி.ச.)

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது.

இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடரில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இந்தோனேசியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்தோனேசிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சோபனா மோஸ்தரி அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தோனேசிய அணிக்கு தொடக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்தோனேசிய அணி 17.3 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் வங்காளதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA