மதுரை திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.28 ஆயிரம் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
மதுரை, 10 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாபு - சுதா தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த
5 sovereigns of gold jewelry and Rs. 28,000 stolen


மதுரை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாபு - சுதா தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ.28 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார்,இக்கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதியின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் தொப்பி அணிந்த 3 நபர்கள் அந்த வீதிகளில் சந்தேகப்படும்படியாக சுற்றிச் சுற்றி நோட்டமிடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மேலும் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியிலேயே நள்ளிரவில் மர்ம நபர்கள் உலா வந்து கொள்ளையடித்த சம்பவம் மற்றும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b