Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 10 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அமமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுகவுடன் அமமுக இணைப்பு இல்லை என்றும், தேர்தல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி மற்றும் ஆதரவு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து விமர்சித்த டிடிவி தினகரன், “புதிய சட்டமன்றத்தை முதல்வரின் வீடு அருகே அமைக்க திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது. துக்ளக் ஸ்டைலில் இந்த ஆட்சி போகிறது. பக்கத்தில் வீடு இருப்பதால் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுகிறார் என்று நினைக்கிறேன். இதற்கெல்லாம் மக்கள் நிச்சயம் ஒரு தீர்ப்பு வழங்குவார்கள்” எனக் கூறினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் விமர்சனம் செய்த டிடிவி தினகரன், “சினிமாவில்தான் ஹீரோ விஜய்; உண்மையான வாழ்க்கையில் அவர் வில்லன்” என கடுமையாக விமர்சித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P