பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் முக்கிய அறிக்கை
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) பேரறிஞர் அண்ணா 118வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, வள்ளுவர் கோட்டத்திற்கு அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார் என்று சென்னை மேற்கு திமுக மாவட்டச்
Anna Birthday


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

பேரறிஞர் அண்ணா 118வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, வள்ளுவர் கோட்டத்திற்கு அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார் என்று சென்னை மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில்,

பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 118வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2026 அன்று காலை 9.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

கழக முன்னாள் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, மாற்றுத் திறனாளிகள் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, கல்வியாளர்கள் அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN