கிழக்கு கடற்கரை சந்தைக்கான இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டு விதியில் தளர்வு - ஆஸ்திரேலியா அரசு அதிரடி
ஆஸ்திரேலியா, 10 செப்டம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலிய அரசு, கிழக்கு கடற்கரை சந்தைக்கு 20 சதவீத இயற்கை எரிவாயுவை கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என்ற தனது ஆரம்பகட்ட விதிமுறை திட்டத்தை தளர்த்தியுள்ளது. உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு வரை ஒதுக்க வேண்டும் என்
Australian government takes bold step to relax natural gas allocation rules for the East Coast market.


ஆஸ்திரேலியா, 10 செப்டம்பர் (ஹி.ச.)

ஆஸ்திரேலிய அரசு, கிழக்கு கடற்கரை சந்தைக்கு 20 சதவீத இயற்கை எரிவாயுவை கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என்ற தனது ஆரம்பகட்ட விதிமுறை திட்டத்தை தளர்த்தியுள்ளது.

உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு வரை ஒதுக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை தற்போது கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறையைத் தடுத்து, நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்கான அரசின் உத்தியின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் போவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியாளர்கள் தற்போது ஆண்டுதோறும் கூடுதலாக 200 பெட்டா ஜூல் வரை எரிவாயுவை வழங்க முடியும் என்றும், இது எரிசக்தி சந்தை நிறுவனங்கள் கணித்துள்ள 140 பெட்டா ஜூல் வரையிலான பற்றாக்குறையை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட இந்தக் கொள்கை எரிவாயுவை மலிவானதாக மாற்றும் என்றும், உள்நாட்டு சந்தையில் ஓரளவு உபரியை பராமரிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு கடற்கரைக்கு கடுமையான 20 சதவீத ஒதுக்கீட்டுத் திட்டத்தை முன்பு முன்மொழிந்த தொழிலாளர் கட்சி அரசு, தற்போது 15 முதல் 25 சதவீதம் வரையிலான நெகிழ்வான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாற்றம் ஆரிஜின் எனர்ஜி, ஷெல் மற்றும் சாண்டோஸ் ஆகிய நிறுவனங்களால் இயக்கப்படும் மூன்று முக்கிய எல்என்ஜி ஏற்றுமதி திட்டங்களை பாதிக்கும். ஆஸ்திரேலியா வடமேற்கு பகுதியில் குறிப்பிடத்தக்க இருப்புகளைக் கொண்ட முன்னணி எல்என்ஜி ஏற்றுமதியாளராக இருந்தாலும், அதிக தேவை தென்கிழக்கு பகுதியில் இருப்பதால், இத்தகைய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

Hindusthan Samachar / vidya.b