மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.) மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத்
விஜய்


தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தவெக துணைப் பொதுச் செயலாளருமான கே. மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.

அதேபோல், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தென்கிழக்கு தவெக மாவட்டக் கழகச் செயலாளருமான பி. சத்தியபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரு தொகுதிகளிலும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P