Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
எமர்ஜென்சி காலத்தில் மிசாவில், தான் கைது செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,
மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.
காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.
எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.
யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.
சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.
அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.
அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.
தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?
பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.
தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.
முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.
வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN