கல்விக்கான அரசு செலவினம் குறைகிறது, ஆனால் பாஜகவின் கட்சி நிதி மட்டும் பெருகுகிறது - சிபிஐ(எம்) எம்.பி. வி.சிவதாசன் கடும் விமர்சனம்
புதுடெல்லி, 10 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் ஆண் மாணவர்களுக்கான தனியார் விடுதியாக செயல்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்
CPI(M) MP V. Sivadasan's sharp criticism.


புதுடெல்லி, 10 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் ஆண் மாணவர்களுக்கான தனியார் விடுதியாக செயல்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி. வி.சிவதாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியார் பிஜி விடுதிகளை நம்பியே வாழ வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடங்களை உருவாக்க அரசு தயாராக இல்லை. பாஜகவின் நிதி அதிகரிக்கிறது, ஆனால் கல்விக்கான அரசின் செலவினம் குறைந்து கொண்டே வருகிறது.

பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க அவர்கள் தயாராக இல்லை. கல்வித் துறையில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

சத்ய நிகேதன் கட்டிட விபத்து நடந்த பகுதியில் கட்டிட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. விதிகள் மீறப்பட்டுள்ளது.

இவ்வாறு எம்.பி. சிவதாசன் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b