கோவையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை டெலிவரி செய்து மாருதி சுசுகி சாதனை
கோவை, 10 செப்டம்பர் (ஹி.ச.) கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோவை மாருதி சுசுகி டீலர்க
கார் கண்காட்சி


கோவை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கோவை மாருதி சுசுகி டீலர்களான அம்பாள் ஆட்டோ, ஏபிடி, ஆதி மாருதி மற்றும் ஜெய்கிருஷ்ணா ஆகியோர் சார்பில் இந்த சிறப்பு டெலிவரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாருதி சுசுகியின் கோவை ஏரியா மேனேஜர் தேவான்சு மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கார் சாவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அம்பாள் ஆட்டோ நிர்வாக இயக்குநர் அனீஷ், ஆதி மாருதி நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், ஜெய்கிருஷ்ணா நிர்வாக இயக்குநர் பிரவீன் மற்றும் ஏபிடி சிஓஓ மது பண்ணாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், புதிய கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து மாருதி சுசுகி கோவை ஏரியா மேனேஜர் தேவான்சு மான் கூறுகையில், “கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான மைல்கல்லாகும்.

புதிய பிரெஸ்ஸா மற்றும் மிட்-SUV பிரிவில் உள்ள விக்டோரிஸ் ஆகிய மாடல்களுக்கு கோயம்புத்தூர் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. SUV பிரிவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைப்போம் என்றார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P