Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. பி.எஸ். பாபுவிற்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராகவும், நிலையாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வி.எஸ்.பாபுவின் உடல்நலக்குறைவு குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b