கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த மாதத்திற்கான நிதியுதவியாக 8 பே
Trust


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இந்த மாதத்திற்கான நிதியுதவியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் ரூ.5 கோடியை வழங்கியிருந்தார்.

அந்தத் தொகை வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் ஏழை, எளிய மற்றும் நலிந்தோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட்ட உதவித்தொகை, 2012 ஜூன் மாதம் முதல் ரூ.20 ஆயிரமாகவும், 2013 ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதியுதவி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து செல்லும் பயணச் செலவைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான தொகை தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

இந்த மாதம் நிதியுதவி பெற்றவர்கள்:

சேலம் மாவட்டம் எம். கதிரேசன்

அரியலூர் மாவட்டம் ரா. ராஜேந்திரன்

கரூர் மாவட்டம் ஜே. பத்மநாதன்

நாமக்கல் மாவட்டம் மு. மோகன்

தருமபுரி மாவட்டம் ஆர். தங்கவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் எம். கிருஷ்ணன்

கோவை மாவட்டம் ஆர். சரண்யா

ஈரோடு மாவட்டம் க.கா. சுப்பிரமணியம்

ஆகிய 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN