Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. பி.எஸ். பாபுவிற்கு
இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அறிந்ததும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b