மடப்புரம் அஜித்குமார் வழக்கு - 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
மதுரை, 10 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மானாமதுரை சரக துண
Ajith Kumar


மதுரை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மானாமதுரை சரக துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த 4 பேர் மீதும் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.

மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN