மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள
Hh


Bb


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் (தனி) தொகுதி:

கணிதா சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர்.

தாராபுரம் (தனி) தொகுதி:

கே. பானுமதி, பி.ஏ., திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர்.

அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, இரு தொகுதிகளிலும் மேற்கண்டவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்படுவதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ