மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக இரு தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்
Kamalalayam


Bb


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக இரு தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் தமிழக பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன்படி, மதுராந்தகம் தொகுதிக்கு பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன், மாவட்ட தலைவர் டாக்டர் எம். பிரவீன் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வி.ஏ.டி. கலிவரதன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் தொகுதிக்கு பாஜக மாநில செயலாளர் ஆர். நந்தகுமார் மற்றும் மருத்துவப் பிரிவு மாநில அமைப்பாளர் டாக்டர் எஸ்.டி. பிரேம் குமார் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ