மும்பையில் விநாயகர் சிலை சரிந்து 2 வாலிபர்கள் காயம்
மும்பை, 10 செப்டம்பர் (ஹி.ச.) மும்பை தாராவியை சேர்ந்த கணபதி மண்டல் அமைப்பினர், 10 அடி உயர விநாயகர் சிலையை வித்யாவிகாரில் இருந்து தாராவிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். நேற்று இரவு 9.45 மணியளவில் ஊர்வலம் நடைபெற்றது. குர்லா மேற்கு எல்.பி.எஸ். சாலை
A


மும்பை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

மும்பை தாராவியை சேர்ந்த கணபதி மண்டல் அமைப்பினர், 10 அடி உயர விநாயகர் சிலையை வித்யாவிகாரில் இருந்து தாராவிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

நேற்று இரவு 9.45 மணியளவில் ஊர்வலம் நடைபெற்றது.

குர்லா மேற்கு எல்.பி.எஸ். சாலையில் உள்ள சீத்தல் தலாவ் பகுதியை ஊர்வலம் அடைந்தபோது, பீடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதில் சிலை உடைந்து சேதமடைந்தது.

மேலும், சிலை விழுந்ததில் அருகில் நின்று கொண்டிருந்த சந்தோஷ் (28), ரோகித் (25) ஆகிய 2 வாலிபர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA