தெளிவான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டுச் சூழலை உருவாக்குவதே இலக்கு - அமைச்சர் கீர்த்தனா
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) தெளிவான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டுச் சூழலை உருவாக்குவதே இலக்கு என முதலீடு குறித்து தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது, ஒரு முதலீட்டு முடிவு, பல்வேறு அனுமதிகளுக்குள் சிக்கி தாமதமாகி
Minister Keerthana


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

தெளிவான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டுச் சூழலை உருவாக்குவதே இலக்கு என

முதலீடு குறித்து தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது,

ஒரு முதலீட்டு முடிவு, பல்வேறு அனுமதிகளுக்குள் சிக்கி தாமதமாகிவிடக் கூடாது. முதலீடு செய்வதை எளிதாக்குவது என்பது, முதலீட்டு முடிவை எடுத்த பிறகு அதை விரைவாக செயல்படும் தொழில் நிறுவனமாக மாற்றுவதற்கான நடைமுறைகளையும் எளிதாக்குவதாகும்.

அதனால்தான், முதலீட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வலுப்படுத்தி வருகிறது.

• கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடியில் உடனடியாக தொழில் தொடங்குவதற்கான தயார் நிலையில் உள்ள தொழில் வளாகங்கள் அமைக்கப்படுகின்றன.

• தொழிற்சாலைகளுக்கான நில ஒதுக்கீட்டை எளிதாக்கும் வகையில், தற்போது கிடைக்கும் மற்றும் வரவிருக்கும் நிலங்களின் விவரங்களுடன், முப்பரிமாண காட்சிப்படுத்தல் வசதியும் கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

• தற்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தொழில் எளிதாக்குதல் (திருத்த) சட்டம், 2026 மூலம் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் பல்வேறு மாநில சட்டங்களின் கீழ் உள்ள நடைமுறைகளை ஒருங்கிணைத்து, ஒரே முதலீட்டு வசதிப்படுத்தும் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும். இதன் மூலம் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை அனுமதிகளை 21 நாட்களுக்குள் வழங்குவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

மேலும், பெரிய அளவிலான, முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளை ஒருங்கிணைத்து, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியையும் ஆணையம் மேற்கொள்ளும்.

இதன் நோக்கம் தெளிவானது. முதலீட்டு முன்மொழிவு முதல் அது நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்தை குறைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும், தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கும், அவற்றை வளர்ப்பதற்கும் ஏற்ற வகையில் தெளிவான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டுச் சூழலை உருவாக்குவதே இலக்கு என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN